வாழ்ந்து காட்டிய சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை நிகழ்வுகள் சுருக்கமாக !
சுவாமி விவேகானந்தர்
( Swami
Vivekananda,
ஜனவரி 12,
1863 - ஜூலை 4 1902 )
பத்தொன்பதாம் நூற்றாண்டின்
இந்தியாவின்
தலைசிறந்த சமயத் தலைவர்களுள்
ஒருவராவார்.
இவரது இயற்பெயர்
நரேந்திரநாத்
தத்தா ( Narendranath Dutta) .
இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான
இவரின்
கருத்துக்கள்
இளைஞர்களை எழுச்சியடையச்
செய்வனவாக அமைந்துள்ளன.
இவர்
இந்தியாவிலும் மேலைநாடுகளிலும்
அத்வைத வேதாந்த
தத்துவங்களை அடிப்படையாகக்
கொண்ட பல
சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார் .
1893
ஆம் ஆண்டு அவர் நிகழ்த்திய
சிகாகோ சொற்பொழிவு உலகப்புகழ்
பெற்றது.
பிறப்பும் இளமையும்
விவேகானந்தர்
1863 ஜனவரி 12ஆம் நாள் கல்கத்தாவில்
விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி
தேவிக்கும் முதல் மகனாகப் பிறந்தார்.
சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல்
கொண்டவராகவும் சிறந்த
விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார் .
இசையும், இசை
வாத்தியங்களும் பயின்றார்.
இள
வயது முதலே தியானம் பழகினார் .
பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார் .
பள்ளிப்படிப்பு
முடிந்தவுடன் 1879
ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மாநிலக்
கல்லூரியில் ( Presidency College)
சேர்ந்தார் .
பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச்
கல்லூரியில் ( Scottish Church
College ) தத்துவம் பயின்றார் .
அங்கே மேல்நாட்டு தத்துவங்கள் , மற்றும்
ஐரோப்பிய நாடுகளின்
வரலாறு முதலியவற்றை படித்தறிந்தார் .
இச்சமயத்தில் அவர்
மனதில் இறை உண்மைகளைப் பற்றி பல
கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன .
இறைவனைப் பலர் வழிபடுவதும், உலகின்
வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும்
நிறைந்துள்ளதும் அவருக்கு முரண்பாடாக
தோன்றியது .
இது பற்றி பல
பெரியோர்களிடம் விவாதித்தார் ;
மேலும் ,
அக்காலகட்டத்தில் பிரபலமாயிருந்த
" பிரம்ம சமாஜத்தில் "உறுப்பினரானார் .
ஆனால் இம்முயற்சிகள் யாவும் அவர்
கேள்விகளுக்கு தகுந்த விடையளிக்க
முடியவில்லை.
பின்பு
இறை உண்மைகளைப்
பற்றி அறிந்து கொள்வதற்காக ,
இராமகிருஷ்ணரைப்
பற்றி கேள்விப்பட்டு அவரிடம்
சென்றார் விவேகானந்தர் .
ராமகிருஷ்ணரை முதன் முதலாக
விவேகானந்தர் சந்தித்த
ஆண்டு 1881 .
எதையும்
பகுத்தறிந்து ஏற்றுக் கொள்ளும்
விவேகானந்தரால் முதலில்
இராமகிருஷ்ணரின் இறைவனைப் பற்றிய
கருத்துக்களை முழுமையாக
ஏற்றுக்கொள்ள
முடியவில்லை.
பின்னர்
இராமகிருஷ்ணருடன் பல வாதங்கள் புரிந்த
பின்பும் அவரை
பலமுறை பரிசோதித்த பின்பும்
அவரையும் அவர் கருத்துக்களையும்
ஏற்றுக்கொண்டார் விவேகானந்தர் .
தன்
மற்ற சீடர்களிடம் உருவ வழிபாட்டையே
முதன்மையாக போதித்த இராமகிருஷ்ணர் ,
விவேகானந்தரிடம் அத்வைதம் எனப்படும்
அருவ வழிபாட்டை போதித்தார்
துறவறம்
1886 ஆம் ஆண்டு
இராமகிருஷ்ணர் இறந்த பின்
விவேகானந்தரும் இராமகிருஷ்ணரின் மற்ற
முதன்மை
சீடர்களும் துறவிகளாயினர்.
பின்னர்
நான்கு ஆண்டுகள் இந்தியத்
துணைக்கண்டம்
முழுவதும் சுற்றினார் விவேகானந்தர் .
தன்னுடைய இந்த பயணங்கள் மூலம்
இந்தியாவிலுள்ள அனைத்து பகுதிகளின்
கலாச்சாரம் ,
பண்பாடு ,
வாழ்க்கை நிலை
போன்றவற்றை அனுபவித்து அறிந்தார்
விவேகானந்தர் .
அச்சமயத்தில் இந்திய
மக்களின் வாழ்க்கை நிலை மிகவும்
கீழானதாக இருந்தது . மேலும் ,
அது இந்தியர்
ஆங்கிலேயரிடம் அடிமைப்படிருந்த
காலமாகும்.
தன் பயண முடிவில் 24
டிசம்பர்
1892 இல் கன்னியாகுமரி சென்ற
விவேகானந்தர் அங்கே கடல் நடுவில்
அமைந்த ஒரு
பாறை மீது மூன்று நாட்கள் தியானம்
செய்தார் .
அந்த மூன்று நாட்கள்
இந்தியாவின்
கடந்த காலம் ,
நிகழ்காலம்,
மற்றும் எதிர்காலம்
குறித்து தியானம்
செய்ததாக பின்னர் அவர்
குறிப்பிட்டுள்ளார்.
இன்றும் அந்தப் பாறை
விவேகானந்தர் நினைவிடமாக பராமரிக்கப்
பட்டு வருகிறது.
மேலைநாடுகளில்
கன்னியாகுமரியில்
இருந்து சென்னை வந்த
விவேகானந்தரிடம் , அமெரிக்காவின்
1893 ஆம் ஆண்டு உலக
சமய மாநாட்டில் இந்து மதம் சார்பாக
கலந்து கொள்ளுமாறு சென்னை நகர
இளைஞர்கள்
வேண்டுகோள் விடுத்தனர் .
அதை ஏற்றுக்கொண்ட விவேகானந்தர்
அமெரிக்கா
பயணமானார் .
சிகாகோவின் உலகச் சமய
மாநாட்டில் அவர் ஆற்றிய
சொற்பொழிவுகளுக்கு
அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது .
மேலும் சில ஆண்டுகள்
மேலைநாடுகளில் தங்கி பல
சொற்பொழிவுகள் ஆற்றி வேதாந்த
கருத்துக்களை
அவர்களிடம் அறிமுகப் படுத்தினார் .
நியூயார்க், மற்றும் லண்டன் நகரங்களில்
வேதாந்த மையங்களை நிறுவினார் .
இந்தியா திரும்புதல்
1897 ஆம்
ஆண்டு இந்தியா திரும்பியவுடன்
கொழும்பு முதல் கல்கத்தா வரை அவர்
ஆற்றிய
பேச்சுக்கள் ,
அப்போது கீழ்நிலையில்
இருந்த இந்தியரை விழிப்புறச்
செய்வதாகவும் , இளைஞர்கள் தம்முள்
இருந்த ஆற்றல்களை உணரும்படிச்
செய்வதாகவும் அமைந்ததாக
கருதப்படுகிறது .
பின்னர் கல்கத்தாவில்
இராமகிருஷ்ண
மிஷன் மற்றும் மடத்தை நிறுவினார்
விவேகானந்தர் .
ஜனவரி 1899 முதல்
டிசம்பர்
1900 வரை இரண்டாம் முறையாக
மேல்நாட்டு பயணம் மேற்கொண்டார் .
மரணம்
1902
ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள் ,
தனது 39 ஆம் வயதில் பேலூரில்
விவேகானந்தர்
காலமானார் . இன்று அவர் நிறுவிய
இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம்
உலகம் முழுவதும் கிளைகள்
பரவி செயல்பட்டு வருகிறது .
(இந்த தகவலை முடிந்தால் share செய்யுங்கள் )
#Nnsindia
#Nnsdharma
#Nnssastha