Friday, 14 April 2017

* நான் யார் தமிழ்தாயே! *

* நான் யார் தமிழ்தாயே! *

தமிழ்த்தாயே,.

நீ ஒரு இந்துவாக இருப்பதால்
தமிழனாக இருக்க முடியாது என்கிறார்கள்

இஸ்லாமியனும், கிறிஸ்துவனும், ஜைனனும்
தமிழனாக இருக்கலாமாம்,.

வீட்டில் அரபு மொழி பேசுபவனும்,
தெலுங்கு, கன்னடம் பேசுபவனும்,
தமிழனாக இருக்கலாமாம்,.

நித்தம் நித்தம்
தமிழ் பேசும் என்னை
தமிழனல்ல என்கிறார்கள்.

நான் யார் தாயே?

—-

பன்னிரு திருமுறைகள் தந்த எம் பாட்டன்கள்
தமிழன் இல்லையாமே…
தேவராத்திலும் திருவாசகத்திலும் இருக்கும் பாடல்கள்
தமிழில் இல்லையாமே..

கம்பன் பாடியதில் காமம் மட்டும் தெரிகிறதாமே,
சேக்கிலார் பாடியதில் காதல் மட்டும் வழிகிறதாமே,.
பக்தி இலக்கியத்தால் தாயே நீ வளரவில்லையாமே,.

நித்தம் நித்தம்
தமிழையே துதிக்கும் என்னை
தமிழனல்ல என்கிறார்கள்.

நான் யார் தாயே?

பூவைத்து புடவை கட்டி
ஒய்யாரமாய் நீயும் வந்ததுவிடாதே,
பர்தாவும், கவுனும் அணியாதவர்களை
பாவப்பட்ட தமிழர்கள் ஏற்பதில்லை,.

இங்கே,..
சிறு தெய்வங்களெல்லாம் சாத்தானாக மாறி
பல வருடங்கள் ஆகின்றன.

இப்போது அவர்கள் வந்தால்
வேப்பிலையால் அடிப்பதில்லை,
விளக்கமாறால் அடிக்கிறார்கள்,..

முருகனும், இந்திரனும்,வருனனும்,
கொற்றவையும், திருமாலும் வடநாட்டு சாமிகளாம்,
அயல்நாட்டு சாமிகளான அல்லாவும் ஏசுவும்
தமிழ்நாட்டு சாமிகளாம்!.

அதெல்லாம் இருக்கட்டும்,..

நித்தம் நித்தம்
தமிழையே தாய்மொழி என நம்பியிருந்த என்னை
தமிழனல்ல என்கிறார்கள்.

நான் யார் தாயே?

சொல்லிவிட்டுப் போ!...

அனைவருக்கும்
புத்தாண்டு நல்வாழ்த்துகள்...
#Nns

Tuesday, 4 April 2017

* சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை நிகழ்வுகள் சுருக்கமாக !

வாழ்ந்து காட்டிய சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை நிகழ்வுகள் சுருக்கமாக !

            சுவாமி விவேகானந்தர்
( Swami
Vivekananda,
ஜனவரி 12,
1863 - ஜூலை 4 1902 )
பத்தொன்பதாம் நூற்றாண்டின்
இந்தியாவின்
தலைசிறந்த சமயத் தலைவர்களுள்
ஒருவராவார்.
இவரது இயற்பெயர்
நரேந்திரநாத்
தத்தா ( Narendranath Dutta) .

இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான
இவரின்
கருத்துக்கள்
இளைஞர்களை எழுச்சியடையச்
செய்வனவாக அமைந்துள்ளன.
இவர்
இந்தியாவிலும் மேலைநாடுகளிலும்
அத்வைத வேதாந்த
தத்துவங்களை அடிப்படையாகக்
கொண்ட பல
சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார் .
1893
ஆம் ஆண்டு அவர் நிகழ்த்திய
சிகாகோ சொற்பொழிவு உலகப்புகழ்
பெற்றது.

பிறப்பும் இளமையும்

     விவேகானந்தர்
1863 ஜனவரி 12ஆம் நாள் கல்கத்தாவில்
விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி
தேவிக்கும் முதல் மகனாகப் பிறந்தார்.
சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல்
கொண்டவராகவும் சிறந்த
விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார் .
இசையும், இசை
வாத்தியங்களும் பயின்றார்.
இள
வயது முதலே தியானம் பழகினார் .
பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார் .
பள்ளிப்படிப்பு
முடிந்தவுடன் 1879
ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மாநிலக்
கல்லூரியில் ( Presidency College)
சேர்ந்தார் .

பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச்
கல்லூரியில் ( Scottish Church
College ) தத்துவம் பயின்றார் .
அங்கே மேல்நாட்டு தத்துவங்கள் , மற்றும்
ஐரோப்பிய நாடுகளின்
வரலாறு முதலியவற்றை படித்தறிந்தார் .
இச்சமயத்தில் அவர்
மனதில் இறை உண்மைகளைப் பற்றி பல
கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன .
இறைவனைப் பலர் வழிபடுவதும், உலகின்
வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும்
நிறைந்துள்ளதும் அவருக்கு முரண்பாடாக
தோன்றியது .
இது பற்றி பல
பெரியோர்களிடம் விவாதித்தார் ;
மேலும் ,
அக்காலகட்டத்தில் பிரபலமாயிருந்த
" பிரம்ம சமாஜத்தில் "உறுப்பினரானார் .
ஆனால் இம்முயற்சிகள் யாவும் அவர்
கேள்விகளுக்கு தகுந்த விடையளிக்க
முடியவில்லை.

பின்பு
இறை உண்மைகளைப்
பற்றி அறிந்து கொள்வதற்காக ,
இராமகிருஷ்ணரைப்
பற்றி கேள்விப்பட்டு அவரிடம்
சென்றார் விவேகானந்தர் .

ராமகிருஷ்ணரை முதன் முதலாக
விவேகானந்தர் சந்தித்த
ஆண்டு 1881 .
எதையும்
பகுத்தறிந்து ஏற்றுக் கொள்ளும்
விவேகானந்தரால் முதலில்
இராமகிருஷ்ணரின் இறைவனைப் பற்றிய
கருத்துக்களை முழுமையாக
ஏற்றுக்கொள்ள
முடியவில்லை.
பின்னர்
இராமகிருஷ்ணருடன் பல வாதங்கள் புரிந்த
பின்பும் அவரை
பலமுறை பரிசோதித்த பின்பும்
அவரையும் அவர் கருத்துக்களையும்
ஏற்றுக்கொண்டார் விவேகானந்தர் .

தன்
மற்ற சீடர்களிடம் உருவ வழிபாட்டையே
முதன்மையாக போதித்த இராமகிருஷ்ணர் ,
விவேகானந்தரிடம் அத்வைதம் எனப்படும்
அருவ வழிபாட்டை போதித்தார்

துறவறம்
            1886 ஆம் ஆண்டு
இராமகிருஷ்ணர் இறந்த பின்
விவேகானந்தரும் இராமகிருஷ்ணரின் மற்ற
முதன்மை
சீடர்களும் துறவிகளாயினர்.
பின்னர்
நான்கு ஆண்டுகள் இந்தியத்
துணைக்கண்டம்
முழுவதும் சுற்றினார் விவேகானந்தர் .
தன்னுடைய இந்த பயணங்கள் மூலம்
இந்தியாவிலுள்ள அனைத்து பகுதிகளின்
கலாச்சாரம் ,
பண்பாடு ,
வாழ்க்கை நிலை
போன்றவற்றை அனுபவித்து அறிந்தார்
விவேகானந்தர் .

அச்சமயத்தில் இந்திய
மக்களின் வாழ்க்கை நிலை மிகவும்
கீழானதாக இருந்தது . மேலும் ,
அது இந்தியர்
ஆங்கிலேயரிடம் அடிமைப்படிருந்த
காலமாகும்.

தன் பயண முடிவில் 24
டிசம்பர்
1892 இல் கன்னியாகுமரி சென்ற
விவேகானந்தர் அங்கே கடல் நடுவில்
அமைந்த ஒரு
பாறை மீது மூன்று நாட்கள் தியானம்
செய்தார் .

அந்த மூன்று நாட்கள்
இந்தியாவின்
கடந்த காலம் ,
நிகழ்காலம்,
மற்றும் எதிர்காலம்
குறித்து தியானம்
செய்ததாக பின்னர் அவர்
குறிப்பிட்டுள்ளார்.
இன்றும் அந்தப் பாறை
விவேகானந்தர் நினைவிடமாக பராமரிக்கப்
பட்டு வருகிறது.

மேலைநாடுகளில்
   
       கன்னியாகுமரியில்
இருந்து சென்னை வந்த
விவேகானந்தரிடம் , அமெரிக்காவின்
1893 ஆம் ஆண்டு உலக
சமய மாநாட்டில் இந்து மதம் சார்பாக
கலந்து கொள்ளுமாறு சென்னை நகர
இளைஞர்கள்
வேண்டுகோள் விடுத்தனர் .
அதை ஏற்றுக்கொண்ட விவேகானந்தர்
அமெரிக்கா
பயணமானார் .

சிகாகோவின் உலகச் சமய
மாநாட்டில் அவர் ஆற்றிய
சொற்பொழிவுகளுக்கு
அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது .
மேலும் சில ஆண்டுகள்
மேலைநாடுகளில் தங்கி பல
சொற்பொழிவுகள் ஆற்றி வேதாந்த
கருத்துக்களை
அவர்களிடம் அறிமுகப் படுத்தினார் .

நியூயார்க், மற்றும் லண்டன் நகரங்களில்
வேதாந்த மையங்களை நிறுவினார் .
இந்தியா திரும்புதல்

1897 ஆம்
ஆண்டு இந்தியா திரும்பியவுடன்
கொழும்பு முதல் கல்கத்தா வரை அவர்
ஆற்றிய
பேச்சுக்கள் ,
அப்போது கீழ்நிலையில்
இருந்த இந்தியரை விழிப்புறச்
செய்வதாகவும் , இளைஞர்கள் தம்முள்
இருந்த ஆற்றல்களை உணரும்படிச்
செய்வதாகவும் அமைந்ததாக
கருதப்படுகிறது .

பின்னர் கல்கத்தாவில்
இராமகிருஷ்ண
மிஷன் மற்றும் மடத்தை நிறுவினார்
விவேகானந்தர் .

ஜனவரி 1899 முதல்
டிசம்பர்
1900 வரை இரண்டாம் முறையாக
மேல்நாட்டு பயணம் மேற்கொண்டார் .
மரணம்

1902
ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள் ,
தனது 39 ஆம் வயதில் பேலூரில்
விவேகானந்தர்
காலமானார் . இன்று அவர் நிறுவிய
இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம்
உலகம் முழுவதும் கிளைகள்
பரவி செயல்பட்டு வருகிறது .

(இந்த தகவலை முடிந்தால் share செய்யுங்கள் )

#Nnsindia
#Nnsdharma
#Nnssastha

Wednesday, 8 March 2017

திருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்...

திருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;
----------------------------------------
திருமண
மந்திரங்களிலேயே சர்ச்சையை ஏற்படுத்தும்
மந்திரமும்,
கடவுள்
மறுப்பாளர்களுக்கும்,பகுத்தறிவாளர்களும்
சுட்டிக்காட்டும் மந்திரம்இதுவே ஆகும்.

அந்த
மந்திரம் என்னவென்றால்.,

"ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித
உத்தர:
த்ரூதீயோ அக்னிஷ்டேபதி:
துரீயஸ்தே மனுஷ்யஜா:

        திருமணமாகப் போகும் மணப்பெண் முதலாவதாக
சோமன் என்பவனுக்கு மனைவியாக இருந்தால்,

இரண்டவதகக் கந்தர்வன்
என்பவனுக்கு மனைவியாக இருந்தால்,

முன்றாவதாக அக்னிக்கு மனைவியாக
இருந்திருக்கிறாள்,

நான்கவதகத்தான்
இப்பொழுது அருகில் இருக்கும்
மணமகனுக்கு மனைவியாகிறாள்.

மணமகள்
இதற்குமுன் மூன்று கடவுள்களுக்கும்
மனைவியாக இருந்த பின்புதான்,
நான்காவதாக
மணமகனை மணக்கிறாள் என்பது விளக்கமாகும்.

      ஆனால் இதன் உண்மையான அர்த்தம்
எல்லாருக்கும் புரிவது இல்லை.
பெண்
குழந்தை பிறந்ததில் இருந்து திருமணம்
வரை இருக்கும் காலத்தை மூன்றாகப் பிரித்துச்
சொல்கிறார்கள்.

முதல் பாகத்தைக் காப்பாற்றும்
பொறுப்பை ஏற்பவர் ஸோமன். இது சந்திரனைக்
குறிக்கும்.
சந்திரன் குளிர்ச்சியும் மகிஷ்ச்சியும்
அளிப்பவன். தேவர்கள் பலசாலியாக
இருப்பதற்கு எப்படிச் சந்திரனின் அருள்
தேவையோ அது போல பூமி வளம்
பெறுவதற்கும் சந்திரனின் அருள் தேவை. அவன்
அருளால் உலக ஆரோக்கியத்திற்கு உகந்த
வகையில் பருவங்கள் உருவாகிறது.

பூமி,
வலுவும் வளமும் பெறுகிறது. அவன் அருளால்
பெண்ணின் குழந்தைப் பருவம்
ஆரோக்கியமானதாகவும், வளம்
பொருந்தியதாகவும் இருக்கும். இதற்குச் சந்திரனின்
அருள் தேவை.

மேலும் ஆயுர்வேத
முறைப்படியும்,
சோமம் என்றால் "கபம்" என்றும்
ஒரு பொருள் உண்டு. பிறந்த
குழந்தைக்கு இருக்கும் அதிகக் கபத்தினால்
தொல்லைகள் கொடுக்காமல் காப்பாற்றும்
பொறுப்பை ஏற்பவன் ஸோமன். மேலும்
குழந்தை பிறந்து சிலவருடங்கள் வரை தாயின்
கண்காணிப்பில் இருக்கும். தாயின் மென்மையான
அணுகுமுறையைக் கூட ஸோமனின்
உதாரணத்துக்குச் சொல்லலாம்.

     வளர்கையில் பெண்ணின் குணமும், குரலும்,
மாறி அழகு அதிகரிக்கிறது. பெண் கனவு காண
ஆரம்பிக்கிறாள். இதில் இருந்து அவளைக்
காத்து நல்வழிக்குத் திருப்பும்
பொறுப்பு கந்தர்வர்களுடையது.
அதாவது தாய்,
தந்தை இருவரும் சேர்ந்து பெண்ணைக்
கண்காணிக்கிறார்கள். அவளுடைய அழகுக்குக்
காரணனான கபத்தை மட்டுப் படுத்தி அவளைத்
தன்னிலை பெறச் செய்வது கந்தர்வர்கள் பொறுப்பு.

       அழகும்,
பருவமும் சேர்ந்து விட்டால் பின்னால்
ஏற்படும் உணர்வுகளுக்கும் அவளுடைய
துணை தேடும் நினைவுகளுக்கும் காரணம் அக்னி.

இந்தச் சமயத்தில் தான் பெண் அந்த அக்னியைப்
போல இருக்க வேண்டும். அவள் நினைவுகளும்,
கனவுகளும் அவளைச் சுட்டுப் பொசுக்காமல்
அவளைப் பாதுகாப்பவன் அக்னி.
அந்தப்
பாதுகாப்பு உணர்வு அவளுக்குத் தோன்றக்
காரணமாக இருப்பவன் அக்னி.
ஏனென்றால்
சிருஷ்டியின் மூலமே பெண்ணால்தான்.
தன்னிச்சையாகச் செயல் படும்
தகுதி அவளுக்கு இருந்தாலும் அவள்
ஜாக்கிரதையாகத் தன் குடும்பம்,
சமூகம் என்ற
உணர்வுகளோடு ஆரோக்கியமான
சிந்தனைகளோடு செயல் படுவதற்குக் காரணம்
அக்னி.

பெண்ணினம் காப்பாற்றப் பட்டால்
அத்தனை தர்மங்களும் காப்பாற்றப் படும்.
ஆகவே திருமணம் ஆகும் வரை அவளைக் காக்கும்
பொறுப்பை அக்னி ஏற்றுக் கொண்டு மணமகனிடம்
மணப் பெண்ணை ஒப்படைக்கிறார்.

       ஆகவே தான்
திருமணங்கள் அக்னி சாட்சியாகவும்
நடைபெறுகிறது. மணமகன்,
மணமகள் இருவரும்
சேர்ந்து
ஸோமன்,
கந்தர்வன், அக்னி இவர்கள்
மூவருக்கும் முறைப்படி அவர்களுக்குப்
பூஜை செய்து வணங்கி வழி அனுப்புவார்கள்.

முறையே சந்திரனுக்குப் பிடித்த
பழத்தை ஒரு குழந்தைக்கும்,
கந்தர்வனுக்கு வேண்டிய ஆடை,
அலங்கரம்,
வாசனைத் திரவியம்
போன்றவைகளுக்கு மணமகன்,
மணமகள்
ஆடைகளில் இருந்து நூல் எடுத்தும், அக்னிக்குப்
பிரியமான நெய்யும்
கொடுத்து வழி அனுப்புவார்கள்.

    இதில் அவர்கள்
இதுவரை செய்த தவறுகளை மன்னிக்கவும்,
மேலும் இனித் தவறு செய்யாமல் இருக்கவும்
இருவரும் வேண்டும் வேண்டுதலும் இருக்கும்.

     அக்னி பரிசுத்தமானது. அவன் பாதுகாப்பில் இருந்த
பெண்ணும் சுத்தமானவள். அப்பழுக்கற்றவள்.
ஆகையால் நாம் சந்தேகமே இல்லாமல்
வேதங்களும் மந்திரங்களும் கூறும் உண்மையைப்
புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

#Nnsdharma
#Nnsindia
#Nnssastha